Sunday, March 16, 2008

உங்க எழுத்து பெட்னா தமிழ் விழா 2008 மலரில் வரணுமா?

வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!

ஒவ்வொரு ஆண்டுவிழாவின்போதும் பெட்னா ஒரு மலரை வெளியிடுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களும், அக, அயலக நண்பர்களும் எழுதுவது வழக்கம். இவ்வாண்டும் வலைப்பதிவர்களாகிய உங்களது படைப்புக்களை மலரில் இணைக்க விரும்புகிறோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அதிகமில்லை. கீழ்க்கண்ட மையக் கருத்தினை ஒட்டிய உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும், அவ்வளவுதான்!

திருவிழாவின் மையக்கருத்து: இனம் வாழ மொழி காப்போம்! மொழி காக்க கைகோர்ப்போம்!

படைப்புகளுக்கான உத்தேசமான கருப்பொருட்கள்: தமிழ் மொழி, சமூகம், பண்பாடு, இன மேம்பாடு மற்றும் அதற்கான திட்டங்கள், நவீனத் தமிழ் இலக்கியம், பன்னாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை முறை, மொழிப்பற்று, பேச்சு வழக்கு, பழந்தமிழ்க் கலைகள், அக்கலைகளில் பயிற்சி மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள், கலைச் சின்னங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, இளைய தலைமுறையினரின் மொழி இன ஈடுபாடு மற்றும் அதற்கான திட்டங்கள், இன்றைய கணினி அறிவியல் உலகில் தமிழ் மொழியின் நிலை மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் முதலானவை.

படைப்புகளின் வடிவம்: கதை, கட்டுரை, கவிதை (நிறைய கவிதைகள் வருவதனால் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள இயலாது!)உரையாடல், நேர்காணல், துணுக்கு ஆகியன. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு இவற்றை வெளிப்படுத்தும் சீர்மிகு ஓவியங்களும் மற்றும் புதிர்கள், விளையாட்டுக்கள் போன்றவையும் வரவேற்கப்படுகின்றன.

பக்க அளவு: A-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்

கடைசி நாள்: தயவு செய்து மே 10 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பவும்!

அனுப்ப வேண்டிய முகவரி: fetna.malar@gmail.com. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது மின்னஞ்சலிலும் கேட்கலாம்.விரைந்து உங்களது படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள்! நன்றி!

Wednesday, March 12, 2008

தமிழ் விழா 2008!


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) வழங்கும் 21 ஆவது தமிழ் விழா, ஆர்லாண்டோ மாநகரில் ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போலவே, இந்த ஆண்டும் பல கலைஞர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் தமிழகத்திலிருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வட அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ளும் நடனங்கள், நாடகங்கள், பட்டிமன்றங்களும் உண்டு! மேலும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள், இளைஞர் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

குழந்தைகளின் கனவுலகமான 'டிஸ்னி' யின் அருகே நிகழும் இந்த தமிழ் விழாவுக்கு குடும்பத்துடன் வந்து பங்குபெற இன்றே திட்டமிடுங்கள்! மேலும் விவரங்களுக்கு http://www.fetna.org/ என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

நன்றி,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை