Friday, September 12, 2008

ஹாலிவுட்டைக் கலக்கும் தமிழரின் "Catch Your Mind"


சுவாமி கந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த “Catch your Mind” என்ற ஹாலிவுட் திரைப்படம் அக்டோபர் 3ல் அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு அண்மையில் குடியேறிய மக்கள் அனைவர் மத்தியிலும் உள்ள முக்கியமான சமூகப்பிரச்னையை யதார்த்தமாக முன்வைத்து ஒரு அருமையான தீர்வைக் கோடிட்டுக் காட்டும் திரைப்படம். ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இக்கதையூடே இழைத்து நன்கு பயன்படுத்தும் திரைப்படம்.

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமி கந்தன் தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றில் பணியாற்றிய பின் அமெரிக்காவில் குடியேறி நியூயார்க்கில் திரைப்படக் கல்வி பயின்றார். அமெரிக்கத் திரைப்பட நுட்பங்களையும், நுணுக்கங்களையும் முறையாகப் பயின்றபின் ஒரிரு அமெரிக்க ஆவணப்படங்களை இயக்கினார். தற்பொழுது “Catch your Mind” என்ற முழுநீள அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கி வெளியிடுகிறார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்கா குடியேறிய தமிழர் ஒருவர் அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை இயக்கியது இதுவே முதல்முறை. அச்சாதனையில் தமிழர்களாகிய நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் 3ஆம் நாள் வெளிவர இருக்கும் இப்படத்தை நமக்கு அருகிலுள்ள திரையரங்கில் சென்று கண்டு களித்துப் பெருமையடைவோம். சுவாமி கந்தனின் இப்ப்டம் வெற்றியடைந்து அவர் மென்மேலும் பல சாதனைகளைக் குவிக்க வேண்டுமென்று வாழ்த்துவோம்!

http://www.catchyourmind.com/

http://www.youtube.com/watch?v=7rirk4jjGew

FEATURE FILM INSPIRES TROUBLED TEENS TO TURN TO SCIENCE:
Get Inspired 10/03/08


PHILADELPHIA (June 17, 2008) — “Catch Your Mind,” an independent family drama expected to motivate teens to find comfort in their loved ones and in exciting new venues like science and technology, opens Oct. 3, 2008 in select theaters in the U.S. and Canada.

Robotics, the science and technology of robots, serves as the backdrop to a film about searching for the self-confidence and life skills it takes to survive adolescence. A story about peer pressure, young love and teenage angst, “Catch Your Mind” is a must-see movie any teen or parent can relate to.

The film’s main character, Bruce, is an excellent student who was raised in a loving home. But somewhere in the middle of his search for self identity, Bruce falls into the wrong crowd and quickly finds his world has turned upside down.

After Bruce loses interest in academics and falls into a self-destructive pattern of underage drinking, his mother and his childhood friend recognize his struggles and entice him to join his high school’s NASA sponsored robotics team. Then everything changes.

“Catch Your Mind” explores emotional conflict, trust and betrayal between a teenage boy and his mom. According to Alan Ostrow and Cathy Beck, high school robotics mentors who helped out with the film, the role robotics plays in the plot is anything but fictional.


“We’ve had a lot of kids come in, confused about where they are in life,” Ostrow said. “More than [robotics] itself, they find a place where they belong.”
This movie depicts that very world, in which a teenager finally feels at home in a place where his family, friends and mentors are his biggest supporters, and anything is possible because science and technology are celebrated.

To maintain accuracy in the film, Kandan recruited high school robotics teams and their mentors as technical advisors. He also brought in a NASA Goddard Space Flight Center contractor and robotics field supervisor who supplied a robotics field. Real life robotics enthusiasts offered their expertise and their machines to create a competition atmosphere for filming in the Philadelphia suburbs.

Swamy Kandan is an independent filmmaker living in Blue Bell, Pa. He holds masters degrees in electronics and management and learned filmmaking at New York University. “Catch Your Mind,” Kandan’s first feature film as writer, director and producer, was inspired by his teenage son’s involvement in competitive high school robotics. This film is produced by Blossom Pictures LLC, a Philadelphia-based company that produces and distributes independent films for the international market.

For distribution information or to schedule an interview, e-mail info@sddigitalcreation.com or visit www.catchyourmind.com.

SHOW TIMES

Laurel 6 Cinema
371 Armstrong Ave.
Laurel, MD 20707
Phone: 301-604-2885
Show times:
Fri- 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Sat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Mon-Thurs- 5:15 PM, 7:30 PM

Worldgate 9 Theatres
13025 Worldgate Drive
Herndon, VA 20170
Phone: 703-318-9290
Show Times:
Fri-Thurs- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM

Movie City 8
1655 Oak Tree Rd
Edison, NJ 08820
Phone: 732-548-2300
Show times:
Fri- 3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Sat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Mon-Thurs- 5:15 PM, 7:30 PM, 9:45 PM

Galaxy Peachtree Funplex 8
6135 Peachtree Pkwy
Norcross, GA 30092
Phone: 770-448-7002
Show times:Friday-Saturday - 12:00 2:20 4:40 7:00 9:20 11:40
Sunday - 12:00 2:20 4:40 7:00 9:20
Monday-Thursday - 2:20 4:40 7:00 9:20

Lake Worth 8 Cinemas
5881 Lake Worth Road
Greenacres, FL 33463
Phone: 561-964-5555
show times:Friday-Thursday - 12:00 2:20 4:40 7:00 9:20

Novi Town Center 8
26085 Town Center Drive
Novi, MI 48375
Phone: 248-465-7469
Show times:
Fri- 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Sat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Mon-Thurs- 5:15 PM, 7:30 PM

The Legends 14 Theatres
1841 Village West Parkway
Kansas City , KS 66111
Phone: 913-428-2992
Show times:
Fri-Thurs-12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM

FOR IMMEDIATE RELEASE

CONTACT: Swamy Kandan
Writer, director and producer
E-mail: info@sddigitalcreation.com
Website: www.catchyourmind.com

Friday, July 11, 2008

வட அமெரிக்காவின் இருபத்தியோராவது தமிழ் மாநாடு

இந்த மாநாட்டை அல்லது விழாவைப் பற்றி கதைக்கும் முன்பாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சிறப்புத்தன்மைகளைக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

வணிகமயமாக்கப் பட்ட இந்த உலகில் சிறுபான்மையினங்கள் தங்கள் இன அடையாளங்களான மொழி, கலை, பண்பாடு போன்றவற்றைப் பேணுவது என்பது மிகக் கடினமான, ஆதாயமில்லாத ஒன்று. வணிகமய உலகின் ஆரம்பமும், அடித்தளமுமான அமெரிக்க மண்ணில் உட்பிளவுகளுக்கும், போட்டி, பொறாமைகளுக்கும் பெயர்பெற்ற தமிழினம் சுய அடையாளத்துடன் பெரிய அளவில் ஒரு விழாவை இருபத்தியோரு ஆண்டுகளாக நடத்தி வருகிறதென்றால், இதைவிட பேரவைக்குப் பெருமை வேறொன்று சொல்ல வேண்டியதில்லை. கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு தோறும் ஜுலை முதல் வாரத்தில் மூன்று நாட்களைத் தமிழ்விழாவாகக் கொண்டாடி வருகிறது. பேரவை என்பது அமெரிக்காவின் பல நகரங்களிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். இம்மூன்று நாட்களில் தமிழர்கள் திரளாக வந்து தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, இசை, நாட்டியம், நாடகம், அமெரிக்க மற்றும் உலகத் தமிழர் முன்னேற்றம் என பல வகையான கருத்துக்களில் கலந்துரையாடல்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.

எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், செம்மையான மொழிக்கூறுகள், பாரம்பரியக் கலைகள், நடன நிகழ்ச்சிகள், நவீன அறிவியல் வளர்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி சமத்துவம், சமூக நீதி போன்ற விழிப்புணர்வுடன் இம்மானாடு நடத்தப் படுகின்றது என்பது இதன் சிறப்பு. தமிழ்த் தாயகங்களில் ஒடுக்கப் பட்ட சமூகங்களின் பிரதினிதிகளும், கலைஞர்களும் இவ்விழாக்களுக்கு வரவழைக்கப் பட்டு, சிறப்பாக போற்றப் படுகின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப் படும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக தன் குரலைத் தொடர்ந்து ஒலித்து வருகிறது இப்பேரவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆண்டு இம்மாநாடு ஜூலை 4 முதல் 6 வரை புளோரிடா மாநிலம் ஓர்லாண்டோ நகரில் நடைபெற்றது. நடுத்தர வர்க்கத்தின் உல்லாச உலகான டிஸ்னிலாண்டுக்குச் சென்று உல்லாசமாக இராமல் தமிழறிஞர்களின் பேச்சுக்கு செவி மடுத்து, தமிழ் இலக்கியத்தை நுகர்ந்து, தமிழிசைக்குத் தலையாட்டி, தமிழ் நடனத்தைக் கண்டு களித்து, தமிழர் அடையாளத்தைப் பேணச் சூளுரை ஏற்று, தமிழைக் கணினி அல்லது கம்ப்யூட்டரில் செயலாக்கியது மானாட்டுக்கு வந்த அதிசயத் தமிழர் கூட்டம். இம்மானாட்டில் குறிப்பாக என்னைக் கவர்ந்தவை பல உண்டு.

பேராசிரியர். சுப வீரபாண்டியன் அவர்களின் தெள்ளத்தெளிந்த சிந்தனைகள் பொதிந்த சொற்பொழிவுகளும், இயக்குனர் சீமானின் தமிழுணர்வினைத் தட்டியெழுப்பும் இசையுடன் கலந்த பேச்சும், இயக்குனர் தங்கர் பச்சானின் யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் வெளிப்படையான பேச்சும் இம்மானாட்டுக்கு வந்தவர்களை கொஞ்சமாவது உலுக்கியிருக்கும். விழாவின் சிறப்புப் பேச்சாளரான பேராசிரியர் சுப. வீரபாண்டியன் “அரசனாக, அகதியாக” என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் சிறப்புரையாற்றினார். எல்லா மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த திரு. வீரபாண்டியன், மொழியை இழந்ததால் நாட்டை இழந்த இனங்களின் வரலாற்றைக் கூறித் தமிழர்கள் தமிழ் மொழியை இழக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். தமிழ் உணர்வு, தரமான ரசனை, மொழி கலப்பின்மை போன்றவற்றை வலியுறுத்திய இயக்குனர் சீமான், சில நாட்டுப் புறப் பாடல்களைப் பாடி மிக அருமையாக உரையாற்றினார். சீமானின் மொழிப் பற்றும், இன உணர்வும், விழாவிற்கு வந்திருந்த இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. இயக்குனர் தங்கர் பச்சானும் தரமான திரைப் படங்கள் பற்றி பேசினார். எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மண்ணையும், மொழியையும் மறந்து விடாதீர்கள் என்றார். அமெரிக்க மண்ணில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் தமிழை எப்பாடு பட்டாவது கற்கவேண்டும். மொழியைக் கற்காமல் பண்பாட்டைப் பேணுவது அதிக நாள் நிலைக்காது என்று கூறினார். ”இனம் வாழ மொழி காப்போம், மொழி காக்கக் கைகோப்போம்” என்ற விழாவின் கோட்பாட்டை மிகவும் வலியுறுத்துவதாக இருந்தன இம்மூவரது உரைகளும்.

கலைமாமணி நர்த்தகி நடராஜனின் சிலப்பதிகார நாட்டிய நாடகம் விழாவின் முத்தான நிகழ்ச்சியாக அமைந்து தமிழர்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தியதென்றால் மிகையாகாது. பேராசிரியர் பாலசுப்பிரமணியத்தின் கணீரெனும் குரலில் இசைத்த சிலப்பதிகாரப் பாடல்களும், அதற்கு ஒத்திசைத்த அருமையான இசைக்குழுவும், கலைமாமணி நர்த்தகி நடராஜனின் துடிப்பான பரதமும், இதைப் போன்றதோர் நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டதில்லை என்று அரங்கத்திலிருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

தமிழிசை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் மம்மது அவர்களின் உரை, ஈராயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழிசை, கர்நாடக இசை என்ற புதிய பெயருடன் இன்று உலவினாலும், தமிழிலக்கியங்களில் தமிழ்ப் பண்களாக விரவிக் கிடக்கின்றது என்று விளங்க வைத்தது. விழாவின் சீரிய நிகழ்ச்சிகளிடையே மெல்லிய நகைச்சுவையை துய்க்கச் செய்தது ஈரோடூ மகேஷ் வழங்கிய நிகழ்ச்சிகள். பட்டி மன்றமானாலும், தனிப்பட்ட நகைச்சுவை விருந்தானாலும் அரங்கத்தைக் கலகலப்பூட்டினார் அந்த இளைஞர். நடிகர் நந்தாவின் பேச்சு நம்மை ஈழத்துக்கேக் கொண்டு சென்றது. ஆணிவேர் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பின் மூலம் அவர் அறிந்த கொண்ட உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார். இதுதவிர கலைமாமணி சுதா இரகுநாதனின் கர்நாடக இசை நிகழ்ச்சியும், ஐங்கரனின் மெல்லிசை நிகழ்ச்சியும் அனைவராலும் கண்டுகளிக்கப் பட்ட முக்கிய அம்சங்களாக இருந்தன.

தமிழ்ச்சங்கங்களின் நிகழ்ச்சிகள் பல பிரமிக்க வைத்தன. குறிப்பாக வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வழங்கிய வினாடி-வினா நிகழ்ச்சி தமிழ்த் தொலைக் காட்சிகள் அனைத்தையும் வெட்கப் படவைக்கும் தரமான நிகழ்ச்சிகள். தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்தும் திரைப்பட உலகையும், அரைகுறை ஆங்கிலத்தமிழையும் கட்டிக் கொண்டு அழுது வரும் இக்காலத்தில் தமிழ் இலக்கியங்களையும், இசையையும் முன்னிறுத்திய என்னதொரு அருமையான வினாடி வினா. இதைப் பல மாதங்களாக உழைத்துச் செம்மையாகத் தயாரித்து வழங்கும் பீட்டர் எரோனிமூஸ் குடும்பத்தினரும், வாசிங்டன் தமிழ்ச்சங்கமும் பெரும்பாராட்டுக்குரியது. கனடா தமிழ்ச்சங்கம் வழங்கிய நாட்டிய நாடகம் ஈழத்தமிழர் வாழ்வில் சாதி ஒடுக்குமுறை நிலவியதை கண்முன் நிறுத்தியது. மிசௌரித் தமிழ்ச்சங்கம் வழங்கிய பறை மற்றும் சிலம்பம் நிகழ்ச்சி, தமிழர்களின் இசைக் கருவியையும், தற்காப்புக் கலையையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தது. நேரமிருந்தால் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் தொழில் முனைவோர் கருத்தரங்கம், திருமண செய்ய முனைவோருக்கான சந்திப்புகள் போன்றவற்றில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்மணம் மற்றும் உத்தமம் அமைப்புகளின் தமிழ்க் கணினிப் பயிலரங்கம் மற்றும் வலைப்பதிவுப் பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்றன. மின்னஞ்சலிலும், இணையத்திலும் தமிழில் எழுதப் பயிற்சி பெற்றனர். வேதாத்திரி மகரிஷியின் யோகாசனப் பயிற்சி வகுப்புகளில் கலந்து பலர் பயன்பெற்றனர்.

விழாவின் அனைத்துக் கொண்ட்டங்களுக்கிடையேயும், ஈழத்தில் அரசு ஒடுக்குமுறையின் கீழ் அல்லல் படும் ஈழத்தமிழ் மக்களை அனைவரும் நினைவு கூர்ந்தனர். அம்மக்களுக்கு விரைவில் உரிமைகளை மீட்டுத் தர வல்லரசுகள் உதவவேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து சிறப்புப் பேச்சாளர்களும், கலைஞர்களும் வலியுறுத்தினர்.

இப்படிப்பட்ட சிறந்த மானாட்டை ஒருங்கிணைக்க திரு. ஸ்ரீ சுப்பிரமணியம், திரு. ஜெய் தபராஜ் போன்றவர்கள் ஏற்றுக் கொண்ட சிரமங்கள் விவரிக்க முடியாதவை. அவர்களுடைய உழைப்பை ஒவ்வொரு இடத்திலும் காண முடிந்தது. பேரவைத் தலைவர் தில்லைக் குமரன் மற்றும் நிர்வாகக் குழுவினரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

Wednesday, June 25, 2008

பேரவைத் திருவிழாவில் கலைமாமணி நர்த்தகி நடராஜ்


தமிழர்களின் பழம்பெரும் நாட்டிய முறையாகிய சதிர் (பரத நாட்டியம்) நமது விழாக்கள் அனைத்துக்கும் அழகு சேர்ப்பவை. வட அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளில் சதிராட்டம் இல்லாத ஒரு நிகழ்வைக் காண்பது அரிது எனும் அளவுக்கு இங்கிருக்கும் மக்களிடையே இந்நடனம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தலைமுறையினர் இந்நடனத்தை வாழ்வின் பல்வேறு உணர்வுகளையும் எடுத்துக் காட்டுவதற்குப் பயன்படுத்துவது போற்றத் தக்கது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் நிகழ்வுகளில் கலையம்சத்துடன், இலக்கியமும், சமூக நோக்கும் சேர்ந்து அழகு செய்யும் சதிராட்ட நிகழ்வுகளைச் செறிவாக இரசிக்கலாம்.

இவ்வகையில் இவ்வாண்டின் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது தமிழகத்திலிருந்து வருகை தரவிருக்கும் கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்களின் "சிலம்பும் தமிழும்" நாட்டிய நிகழ்ச்சி. இந்திய அரசின் வெளியுறவுத் துறையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் எனவும், தமிழ்நாட்டு அரசினால் கலைமாமணி எனவும், திருமுறை நாட்டியச் சுடர், நற்றமிழ் நடனமணி எனவும் புகழ் பெற்றிருக்கும் நர்த்தகி அவர்கள் மூன்றாவது முறையாகப் பேரவையின் நிகழ்வுக்காக வருகை தருவது குறிப்பிடத் தக்கது. மேலும் இவர் வாய்ப்பு கிடைக்கும்போது அமெரிக்காவில் தங்கி, பல இடங்களில் நாட்டியப் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

தஞ்சையில் 17ஆம் நூற்றாண்டிலிருந்து புகழ் பெற்று விளங்கும் "தஞ்சை நால்வர்" வழியில் வந்த பெருமகனார் கே.பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் சீடராகச் சேர்ந்து, சுமார் 15 வருடங்கள் அவரிடமிருந்து நடன நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். மாநில மற்றும் நடுவணரசிடமிருந்து பல விருதுகளைப் பெற்றிருக்கும் நர்த்தகி அவர்கள் தன்னம்பிக்கைக்கும், தளரா உழைப்புக்கும் பெண்டிர், திருநங்கையர், ஆடவர் ஆகிய எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களது வலைத் தளத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

இவரது ஆடல், ஓர்லாண்டோவின் புகழ்பெற்ற பாப் கார் அரங்கின் அழகில் நிகழவிருக்கிறது. வந்து கண்டு களியுங்கள்! விபரங்களுக்கு பேரவையின் இணையத் தளத்தைப் பார்க்கவும்.

Monday, June 23, 2008

ஆவலைத் தூண்டும் பெட்னா நிகழ்வுகள்

அமெரிக்க, கனேடியத் தமிழர்களில் எண்ணற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்ள எதிர்நோக்கும் ஒரு விழா பேரவையின் தமிழ்த் திருவிழா. சென்ற ஆண்டுகளில் விழாவினைக் காண வாய்ப்பில்லாதவர்கள் இதோ, சென்ற ஆண்டு வட கரோலைனா ராலே நகரில் நிகழ்ந்த பேரவை நிகழ்ச்சிகளின் சில கீற்றுகளை இங்கே கண்டு களியுங்கள்!
http://www.youtube.com/watch?v=Y5H-Lw8jNc8
http://www.youtube.com/watch?v=tlKYYkHcmi4
http://www.youtube.com/watch?v=dSyrpYSSFhU
http://www.youtube.com/watch?v=0oDZmcdXfFk

இந்த ஆண்டு ஜூலை 4-6ல் ஓர்லாண்டோ நகரில் நடக்க இருக்கும் விழாவினைப் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

Saturday, June 21, 2008

அனுபவம் புதுமை!

இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்! இனிய மெல்லிய இசை, மனதைக் கவரும் குரல்கள், எல்லாவற்றையும் இணைக்கும் ஒத்திசைவு! இந்த ஐங்கரன் & அனிதா குழு பெட்னா திருவிழாவில் உங்களை இசை மழையில் நனைய வைக்கப் போகிறது!

பெட்னா திருவிழாவில் இன்னும் நிறைய புதுமையான அனுபவங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. அந்நிகழ்ச்சிகளின் விவரங்களை http://www.fetna.org/ என்ற இணையத் தளத்தில் நீங்கள் காணலாம்.

Friday, June 20, 2008

பெட்னா திருவிழாவுக்கு மேதகு அப்துல் கலாம் வாழ்த்து!

ஓர்லாண்டோவில் நடக்க இருக்கும் பெட்னா திருவிழாவினை வாழ்த்தி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தி. ஜூலை 4, 5, 6 ஆகிய நாட்களில், புளோரிடாவில் நடக்க இருக்கும் இந்தத் தமிழர் விழாவினைப் பற்றிய விபரங்களை http://www.fetna.org/ என்ற வலைப்பக்கத்தில் நீங்கள் காணலாம்.

வாழ்த்து மடல்
- Dr. A.P.J. அப்துல் கலாம்


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 21வது தமிழ் விழா கொண்டாடுவது என்றால் என்ன? வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம், 20 முறை சூரியனைச் சுற்றிவிட்டு, 21வது வட்டத்தில் நீங்கள் அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று பொருள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வரிகளுக்கு இணங்க வட அமெரிக்காவிற்கு வந்து உங்கள் திறமையால், அறிவால் உழைத்து நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்த உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு என் வேண்டுகோள்ள் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ, அந்த நாட்டிற்கு உங்களது 100 சதவீத உழைப்பைத் தாருங்கள். தமிழனாகக் கூடி இந்தியனாகப் பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலகக் குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது. 54 கோடி இந்திய இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையைக் காட்டி, அவர்களது கற்பனைத் திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில் உங்களது அறிவைத் தாருங்கள். உங்களது அனுபவத்தைத் தாருங்கள். வாருங்கள், உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம்!

Dr. A.P.J. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர்

Thursday, May 15, 2008

அமெரிக்காவில் தமிழ் விழா!!!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெருமையுடன் வழங்கும் “தமிழ் விழா 2008”

“மொழியும், பண்பாடும் இரு கண்கள்” என்பதை உணர்ந்த தமிழர்கள் காலம் காலந்தொட்டு மொழிக்கும், பண்பாட்டிற்கும் சம அளவு முக்கியம் தந்து வந்துள்ளனர். மொழி வாழ்ந்தால் இனம் வாழும், வளரும் என்பதை உணர்ந்த “தமிழ் விழா 2008” ஏற்பாட்டுக் குழுவினர் இவ்விழாவின் உட்கருத்தை “இனம் வாழ மொழி காப்போம் ... மொழி காக்கக் கை கோப்போம்!” என முன்மொழிந்துள்ளனர். 21 ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அமெரிக்க சுதந்திர தின விடுமுறையில் (ஜூலை 4 - 6) தேனினும் இனிய தமிழுக்கு விழா எடுத்து வருகிறது. இவ்வாண்டு விழா புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரிலுள்ள பாப் கார் அரங்கத்தில் தமிழிசைக்கு மேன்மை தந்த பெரியவர் “இசைப் பேரறிஞர்” பெரியசாமி தூரன் அவர்களின் நூற்றாண்டை கோலாகலமாக கொண்டாடவுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏராளமாய் உள்ளார்கள் வட அமெரிக்க மண்ணில். எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் மண்ணிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள். படிப்பு, பணி, குடும்பம் இதற்கு அப்பாற்பட்டு இந்த அமெரிக்க மண்ணில் தமிழர்கள் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஓரு முக்கியமான அம்சம், "தமிழ்ச் சங்கம்". அமெரிக்காவில் கிட்டதட்ட 35 தமிழ்ச் சங்கங்கள் அந்தெந்த மாநிலத்தில் உள்ளன. இந்த தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் வெறும் பொழுது போக்கு மன்றங்கள் மட்டுமல்ல. நம் உயிரினும் மேலான தமிழ் மொழியை, அதன் வேர்களை, அதன் பெருமைகளை, அதன் சிறப்புகளைப் போற்றிப் பாதுகாக்கும் கோவில்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் தம் குழந்தைகளை தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்து வருவதும், அங்கே அவர்கள் திருக்குறள் சொல்வதும், தமிழ் பாட்டுகள் பாடுவதும், நடனமாடுவதும், பெரியவர்களும் இளைஞர்களும் இணைந்து நாடகம் இயற்றுவதும் நல்லப் பலத் திரைப் பாடலுக்கு நடனம் ஆடுவதும், கொஞ்சம் பெரியவர்கள், இளைஞர்களோடு சேர்ந்து நாடகம் தமிழ்ச் சங்கத்தின் பெருமையான செயல்கள். மொத்ததில் தமிழர்கள் இங்கு "இயல், இசை, நாடகம்" இவை மூன்றிலும் சிறந்து விளங்குகிறார்கள். தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாடு மறவாமல் பொங்கல்/தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா, சித்திரை திருவிழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் விழா என்று பல விழாக்கள் கொண்டாடுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை அனைத்து தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் தனது ஆண்டு (தமிழ்) விழாவின் மூலம் தமிழ் மொழி, மற்றும் தமிழ் இனத்தின் பெருமை பாரெங்கும் பறைசாற்றி வருவதுடன் உரிமைக்கும் குரல் கொடுத்து வருகிறது. இவ்விழா உலகத்தமிழர் உரிமை மாநாடு என்றால் அது மிகையாகாது.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஒற்றுமையையும், தமிழ்மொழியின் சிறப்பையும் கொண்டாட இந்தப் பேரவை ஓவ்வோரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் இம்மாபெரும் தமிழ் விழாவை நடத்திவருகிறது. இவ்விழா தமிழர்களின் விழா, தமிழ் மொழிக்கு எடுக்கும் விழா, தமிழ் மொழிக்கு தன்னலம் பாரமல் உழைத்த தமிழ் ஆர்வலர்களை ஊக்கப் படுத்தி, நன்றி தெரிவிக்கும் விழா!. இந்த தமிழ் விழாவிற்கு நம் தாய் தமிழ்நாட்டில் இருந்து, கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ்த் திரைக் கலைஞர்கள், அரசியல் வாதிகள், சமூகச் சேவை பிரமுகர்கள், மற்றும் பல பிரபலங்கள் வரவழைக்கப் படுவார்கள். இந்த தமிழ் விழா குறைந்தது இரண்டு தினங்கள் நடக்கும். தமிழ்தாய் வாழ்த்தில் ஆரம்பித்து, கவிஅரங்கம், பட்டிமன்றம், இயல், இசை, நாடகம் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கண்களுக்கும், காதுகளுக்கும் ஓரே விருந்தாக அமையும். தமிழ்ச் சங்கப் பேரவையின் மற்றோரு சிறப்பு என்னவென்றால், விளிம்பு நிலை மனிதர்கள், நலிவுற்றக் கலைஞர்கள், அவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள், சமூகச் சேவகர்கள் இப்படி பலரை இங்கு வரவழைத்து கெளரவிப்பார்கள். இது அந்த கலைஞர்களுக்கு மட்டும் அல்ல, இந்த தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் பெருமை!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளூவன் வாக்கிற்கு ஏற்ப மூன்று ஆண்டுகள் முன்பு பால்திரிபு கொண்ட கலைஞர் திருநங்கை நர்த்திகி நடராஜை ஆடவைத்த பெருமை இந்த பேரவைக்கு உண்டு!

தாழ்த்தப் பட்ட மக்களின் பாரம்பரிய கலையை உலகுகிற்கு சொல்லும் விதமாக "நந்தன் கதை" யை மேடை ஏற்றிய பெருமை இப் பேரவைக்கு உண்டு!

நம் தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் வேலையில், நம் தாய் மொழி தமிழை வளர்க்கும் நம்பிக்கை நட்சத்திரங்களான "தாய் தமிழ்ப் பள்ளிகளை" வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெருமை இந்தப் பேரவைக்கு உண்டு!

தமிழின உறவுகளான தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்து, பெரும் ஆதரவாக இருக்கும் மேன்மை இந்தப் பேரவைக்கு உண்டு!

இத்தனை சிறப்பும் தமிழர்களாகிய உங்களின் பங்களிப்பில்லாமல் சாத்தியமாகியிருக்காது. எனவே நீங்கள் தொடர்ந்து தமிழ் விழாவில் கலந்துகொண்டு மேலும் பேரவையை சிறப்பிக்க வேண்டும் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

வழக்கம் போல் தமிழ்நாட்டு பிரபலங்கள் பலர் இந்த வருடத் தமிழ் விழாவை அலங்கரிக்க வருகிறார்கள். அரசு பதவி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வையும், சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்திய முன்னாள் மாவட்ட ஆட்சியர், தற்பொழுது சுற்றலாத்துறை செயலர் முனைவர் இறையன்பு, ஈழ மக்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, தன்னலம் பாராமல் சிறையில் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், யதார்த்த உண்மைகளை படம் பிடித்து காட்டும் ஒளிஓவியர், நெறியாள்கையாளர் (இயக்குனர்) தங்கர்பச்சான், ஆங்கில கலவமால் தமிழ் மொழியை பேசுகின்ற நெறியாள்கையாளர் சீமான், தமிழ் பல்கலை கழகத்தில் இருந்து முனைவர் சி. சுப்ரமணியன், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன், வேலூர் பல்கலைகழக துணை வேந்தர் திரு ஜி. விஸ்வநாதன், சன் தொலைகாட்சி புகழ் ஈரோடு மகேஷ், ஈழ மக்களின் துயரங்களை மிக அழகாக பிரதிபலித்த படம் “ஆணிவேர்” மற்றும் “மௌனம் பேசியதே” புகழ் நடிகர் நந்தா, கலைமாமணி சுதா ரகுநாதனின் தமிழிசை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.மேலும் ஆழியாறு சித்தர் யோகா மையத்தின் யோகா பயிற்சிப் பட்டறை, http://www.infitt.org/ & http://www.thamizmanam.com/ இணைந்து வழங்கும் தமிழ் இணையம் / வலைப்பதிவாளர் பயிற்சிப் பட்டறை, http://www.tamilmatrimony.com/ வழங்கும் matrimonial forum, NTYO, TYO வழங்கும் Youth Meet, Alumni meet, Entrepreneur Forum மற்றும் உங்கள் உள்ளம் கவரும் அனைத்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் நடை பெறெவுள்ளன. திரு கோ. வேள்நம்பியின் தலைமையில் “தாயே, தமிழே! வருங்காலம் நின் காலம்” - கவியரங்கம், ஈரோடு மகேஷ் தலைமையில் “இனி, தமிழ் வளர்வது, தாய்த் தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா?” - பட்டிமன்றம் நடை பெறவுள்ளன. இன்று கருநாடக இசை என்று கூறப்படும் இசை பழந்தமிழ் இசையிலிருந்துதான் பிறந்தது என்று பல அறிஞர்கள் கூறக்கேட்டிருக்கிறோம். திருவையாற்றிலே இசை ஒலிக்கத் துவங்கியதற்கு முன்பே தமிழிசை தமிழகத்திலே வேறூன்றி இருந்தது என்பது தொல்காப்பியம், சிலப்பதிகாரம் படித்தவர்களுக்குத் நன்கு தெரியும். இசை அறியாத நம் போலோரும் அதை அறிந்து கொள்ளும்படி ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இசை அறிஞர் நாகூர்மைதீன் மம்மது அவர்களின் தலைமையில் “பழந்தமிழர் இசை” விளக்க நிகழ்ச்சி முதல் முறையாக அமெரிக்க மண்ணில் அரங்கேறவுள்ளது. திரு மம்மது (http://www.tamilinnisai.org/) அவர்கள் தமிழிசைப் பேரறிஞர் வி. ப. க. சுந்தரம் அவர்களின் மாணவர். இவர் தமிழிசைப் பேரகராதி எனும் பெரும் பணியை தமிழறிஞர் பலருடன் செய்து வருகிறார்.கடந்த ஆண்டைத் தொடர்ந்து, ஞாயிறு காலை 9 முதல் மதியம் 1 மணிவரை இலக்கியக் கருத்தரங்கம் நடை பெறவுள்ளது. “20ஆம் நூற்றாண்டில் தமிழ் இயல், இசை மற்றும் நாடக (கூத்து) மறுமலர்ச்சி” என்கிற தலைப்பில் முனைவர் வே. இறையன்பு, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திரு தங்கர் பச்சான், ஈரோடு மகேஷ், முனைவர் சுப்பிரமணியம், முனைவர் நக்கீரன், திரு மம்மது ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.கடந்த 6 மாதகாலமாக விழாக் குழுவினருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கடுமையாக உழைத்து வருகின்றனர். 2000 தமிழர்கள் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு Hilton நடக்கும் தூரத்தில். பசியாற அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பேரவையின் தொலை நோக்குத் திட்டம்: தமிழ் விழாவிற்கு குறைந்தது 5000 தமிழ்ர்களை வரவழைப்பது, அனைத்து தமிழ்ச் சங்கங்களும் பேரவையின் குடைக்குள் வருவது, பேரவையின் நிதி நிலையை மேம்படுத்தி நிரந்தர மையம் அமைப்பது, மற்றும் தமிழ், தமிழர் வளர்ச்சிக்கு உதவும் தொண்டு அமைப்புகளுக்கு உதவுவது போன்றவைகள் ஆகும். அந்த கனவு நிறைவேற நீண்ட நாட்கள் இல்லை...உங்களின் ஒத்துழைப்போடு.... மீண்டும் ஒர்லாண்டாவில் சந்திக்க ஆவலுடன் உள்ளோம்.மேலும் விவரங்களுக்கு சுடுக்கவும் http://www.fetna.org/ அல்லது கீழ்க் கண்ட நபர்களை அனுகவும். சி. சுப்பிரமணியம் (coordinator) - (954) 675-6883 - chrissubra@aol.com / treasurer@fetna.org தில்லை க. குமரன் - (408) 857-0181 - thillai@sbcglobal.net / president@fetna.org

Friday, April 25, 2008

தமிழ் விழா 2008

தமிழ் விழா 2008

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்
21 ஆவது ஆண்டு விழா

ஜூலை 4, 5, 6 ஆர்லாண்டோ, ப்ளாரிடா
www.fetna2008.org

இந்த மாபெரும் விழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாசிக்கக்கூடிய ஒரு அழகிய விழா மலர் உருவாகிக்கொண்டிருக்கிறது...

இவ்விழா மலரில் உங்கள் எழுத்துக்களும் ஓவியங்களும்
திறமையான வடிவமைப்பில் வெளியிடப்படும்!

ஆகவே விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்பிவையுங்கள்
கடைசி நாள்: மே 10, 2008

அனுப்பவேண்டிய முகவரி: fetna.malar@gmail.com

படைப்புக்கள் அனுப்புவது பற்றி மேலும் தகவலுக்கு இங்கே சுட்டுங்கள்:
http://fetnathiruvizha.blogspot.com/2008/03/2008_16.html

விழா மலரின் கார்ட்டூன் போட்டி பற்றி தெரிந்துகொள்ள இங்கே சுட்டுங்கள்:
http://fetnathiruvizha.blogspot.com/2008/04/2008.html
மிக்க நன்றி!

Sunday, April 6, 2008

பெட்னா தமிழ் விழா 2008 மலரில் கார்ட்டூன் போட்டி

முந்தைய பதிவில் பெட்னா மலரில் எப்படி உங்கள் படைப்புக்கள் இடம்பெறலாம் என்று படித்திருப்பீர்கள். இதே மலரில் ஒரு கார்ட்டூன் போட்டி நடத்தவிருக்கிறோம்!

தலைப்பு: அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கைமுறை
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் குடும்பத்தில், அலுவலகத்தில், அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நிறைய கருத்துக்களும் நகைச்சுவையும் இருக்கின்றன. அவற்றை பிரதிபலிக்கும் விதமாக கருத்துப்படங்கள் அல்லது கேலிச்சித்திரங்களை வரைந்து அவற்றை ஸ்கேன் செய்து எங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி வையுங்கள். அவற்றில் சிறந்த 10 கார்ட்டூன்கள் விழா மலரில் இடம்பெறும். முதல் மூன்று கார்டூன்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

முக்கியமாக சிறார்கள் இந்தப் போட்டியில் உற்சாகமாக பங்கேற்கவேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.

கார்ட்டூன்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: மே 10, 2008
மின் அஞ்சல் முகவரி: fetna.malar@gmail.com

நன்றி,
வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை மலர்க் குழு
http://www.fetna.org/

Sunday, March 16, 2008

உங்க எழுத்து பெட்னா தமிழ் விழா 2008 மலரில் வரணுமா?

வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!

ஒவ்வொரு ஆண்டுவிழாவின்போதும் பெட்னா ஒரு மலரை வெளியிடுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களும், அக, அயலக நண்பர்களும் எழுதுவது வழக்கம். இவ்வாண்டும் வலைப்பதிவர்களாகிய உங்களது படைப்புக்களை மலரில் இணைக்க விரும்புகிறோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அதிகமில்லை. கீழ்க்கண்ட மையக் கருத்தினை ஒட்டிய உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும், அவ்வளவுதான்!

திருவிழாவின் மையக்கருத்து: இனம் வாழ மொழி காப்போம்! மொழி காக்க கைகோர்ப்போம்!

படைப்புகளுக்கான உத்தேசமான கருப்பொருட்கள்: தமிழ் மொழி, சமூகம், பண்பாடு, இன மேம்பாடு மற்றும் அதற்கான திட்டங்கள், நவீனத் தமிழ் இலக்கியம், பன்னாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை முறை, மொழிப்பற்று, பேச்சு வழக்கு, பழந்தமிழ்க் கலைகள், அக்கலைகளில் பயிற்சி மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள், கலைச் சின்னங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, இளைய தலைமுறையினரின் மொழி இன ஈடுபாடு மற்றும் அதற்கான திட்டங்கள், இன்றைய கணினி அறிவியல் உலகில் தமிழ் மொழியின் நிலை மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் முதலானவை.

படைப்புகளின் வடிவம்: கதை, கட்டுரை, கவிதை (நிறைய கவிதைகள் வருவதனால் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள இயலாது!)உரையாடல், நேர்காணல், துணுக்கு ஆகியன. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு இவற்றை வெளிப்படுத்தும் சீர்மிகு ஓவியங்களும் மற்றும் புதிர்கள், விளையாட்டுக்கள் போன்றவையும் வரவேற்கப்படுகின்றன.

பக்க அளவு: A-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்

கடைசி நாள்: தயவு செய்து மே 10 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பவும்!

அனுப்ப வேண்டிய முகவரி: fetna.malar@gmail.com. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது மின்னஞ்சலிலும் கேட்கலாம்.விரைந்து உங்களது படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள்! நன்றி!

Wednesday, March 12, 2008

தமிழ் விழா 2008!


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) வழங்கும் 21 ஆவது தமிழ் விழா, ஆர்லாண்டோ மாநகரில் ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போலவே, இந்த ஆண்டும் பல கலைஞர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் தமிழகத்திலிருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வட அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ளும் நடனங்கள், நாடகங்கள், பட்டிமன்றங்களும் உண்டு! மேலும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள், இளைஞர் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

குழந்தைகளின் கனவுலகமான 'டிஸ்னி' யின் அருகே நிகழும் இந்த தமிழ் விழாவுக்கு குடும்பத்துடன் வந்து பங்குபெற இன்றே திட்டமிடுங்கள்! மேலும் விவரங்களுக்கு http://www.fetna.org/ என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

நன்றி,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை