Wednesday, December 17, 2014

FeTNA 2015 - தொழில்முனைவோர் குழுவின் முதல் கூட்டம்

FeTNA 2015 - தொழில் முனைவோர் குழுவின் முதல் கூட்டம் திரு லேனா கண்ணப்பன் தலைமையில் சென்ற சனிகிழமை அன்று சான்ராமோன் நகரில்  நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை கூறி தொழில்முனைவோர் கருத்தரங்கு செம்மையாக நடைபெறவும் நிகழ்ச்சி நிரலை வலுபடுத்தவும் விவாதித்தனர்.  தொழில் முனைவோர் கருத்தரங்கு கீழ் காணும் நான்கு தலைப்புகளில் இணையரங்குகளில் நடைபெற விவாதிக்க பட்டது.

இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆர்வலருக்கு Start-up போட்டி மற்றும் பரிசுகள்

  1. Entrepreneur committee Key note speakers
  2. Startup - Education/Discussion
  3. TAP Awards


இந்நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யபட்டது. முக்கியமாக மாணவர்களுக்கு

1.ஒரு தொழில் துவங்கும் எண்ணம் மட்டும் இருந்தால் அதை சந்தையின் தேவை, பொருளாதார கணக்கீடுகள் , அதே துறையில் உள்ள நிறுவனங்கள் போன்றவற்றை பற்றி ஆராய்வது, பல்வேறு வகை முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களை அணுகுவது, சட்ட நுணுக்கம் என அனைத்து திசையிலும் எவ்வாறு செயல்பட்டு வெற்றியடைவது என முழுமையாக விளக்குவதோடு , அவர்களை ஊக்கபடுத்தி அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது

2. கம்பெனிகளில் முதல் நிலையில் சேர்ந்து எவ்வாறு பொருளீட்டுவது

போன்ற பல வாய்ப்புகளை விளக்குவது என்றும் முடிவு செய்யபட்டது. எவ்வாறு இந்த கருத்தரங்கு மூலம் FeTNA2015 மாநாட்டுக்கு பொருளீட்டுவது என்பது பற்றியும் விரிவாக அலசபட்டது.
அதுமட்டுமன்றி Key note speakers,TAP awardee nomination  செய்வது பற்றியும் விவாதிக்க பட்டது.

கூட்ட முடிவில் பொறுப்புகள் தனி பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க பட்டடது.  சிலிக்கன் வாலியில் நடக்க இருக்கும் FeTNA2015 விழாவில் அனைத்து தரப்பு மக்களையும் தொழில் முனைவோர் forum  கவர்ந்திழுத்து  தனி முத்திரை பதிக்கும்  என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.


இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக நடத்த உங்களுக்கு எதுவும் யோசனை இருந்தால் என்ற coordinator@fetna.org  மின்னஞ்சலில் விழா ஒருங்கிணைப்பாளரை  தொடர்பு கொள்ளுங்கள்.

No comments: