Wednesday, December 17, 2014

தொல்தமிழ் கலைகளை அடையாள படுத்தும் பேரவையின் (FeTNA) விழா

FeTNA 2014 விழா பற்றிய நினைவுகளை கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் மணல்வீடு என்ற இதழில் பகிர்ந்துளார்கள். FeTNA 2015 தமிழ் விழா பற்றிய முன்னோட்டமாக இதை பார்க்களாம்.



மணல்வீடு என்ற இதழ் திரு ஹரிகிருஷ்ணா  அவர்களால்  தொன்மையான தமிழ் கலைகளை பற்றிய செய்திகளை வெளி கொணர நடத்தபடும் இதழ் ஆகும்


அழிந்து வரும் இந்த கலைகளை காப்பாற்ற திரு ஹரிகிருஷ்ணா அவர்கள் கூத்து பள்ளி தொடங்கி அடுத்த தலைமுறையினருக்கு இந்த கலையின் வடிவம் மாறாமல் தற்போதைய புகழ் பெற்ற கலைஞர்கள் மூலம் பயிற்ச்சி கொடுக்க முயற்ச்சி எடுத்து வருகிறார். FeTNA 2014 விழா மூலமும்  அதை தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு தமிழ் சங்கங்களிலும்  தோல்பாவை கூத்து நடத்தி அமெரிக்க தமிழர்களுக்கும் இங்கு வாழும் குழந்தைகளுக்கும் இந்த அரிய கலையினை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இந்த அமெரிக்க பயணமானது அவரது கனவு திட்டமான கூத்து பள்ளியை தொடங்குவதற்கு சுமார் $7500 நிதியாக கிடைத்துள்ளது.வட அமெரிக்க பேரவையின் (FeTNA) தமிழ் விழா இது போன்ற அழிந்து வரும் கலைகளை உயிப்பிக்கவும் உதவுகிறது என்பது இது ஒரு சிறந்த உதாரணம்.


அதுமட்டுமன்றி இது போன்ற கலைஞர்களை பேரவை இந்தியாவிலிருந்து பொருட்செலவு மற்றும் விசா ஏற்பாடு போன்ற பணிகளை செய்து அழைத்து வருவதன் மூலம் பிற தமிழ் சங்கங்கள் அவர்களை தங்களது பகுதிக்கு எளிதில் அழைக்க முடிகிறது. 

No comments: