Thursday, May 24, 2007

பெட்னா திருவிழாவைப் பற்றி

பெட்னா என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA). இந்த அமைப்பு கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக, வட அமெரிக்காவிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து, ஆண்டுதோறும் ஒரு பெரும் தமிழர் திருவிழாவினை நடத்தி வருகின்றது. இதன்போது தமிழகம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்களும், கலைஞர்களும் வருகை தந்து நம் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிப்பர். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுத் தமிழ்ச் சங்கக் கலைஞர்களுக்கும் தம் திறமையை வெளிக்கொணர இதுவொரு நல்ல வாய்ப்பு.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை இத் திருவிழா வட கரோலைனாவின் ராலே மாநகரில் நடக்கவுள்ளது. இதனைக் குறித்த மேல் விபரங்கள் இந்த வலைப்பதிவில் வெளியிடப்படும். உங்கள் அனைவரையும் ராலேயில் சந்திக்கக் காத்திருக்கிறோம்!

2 comments:

Yuvraj Sampath said...

வணக்கம்...
யாரை தொடர்பு கொள்வது..
ஈ மெயில் I D உண்டா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை said...

வணக்கம் சாம்!
fetna.malar@gmail.com
என்ற மின்னஞ்சலில் எம்மோடு தொடர்பு கொள்ளலாம். விபரங்களை
www.fetna.org
என்ற இணைய தளத்தில் காணலாம்.
அத்தோடு இன்றைய பதிவையும் பார்துவிட்டு உங்கள் படைப்புகளை அனுப்புவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி.