
வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!
ஒவ்வொரு ஆண்டுவிழாவின்போதும் பெட்னா ஒரு மலரை வெளியிடுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களும், அக, அயலக நண்பர்களும் எழுதுவது வழக்கம். இவ்வாண்டு முதன்முறையாக வலைப்பதிவர்களாகிய உங்களது படைப்புக்களையும் மலரில் இணைக்க விரும்புகிறோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அதிகமில்லை. கீழ்க்கண்ட மையக் கருத்தினை ஒட்டிய உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும், அவ்வளவுதான்!
திருவிழாவின் மையக்கருத்து: தமிழால் இணைவோம்! தமிழராய் வெல்வோம்!
படைப்புகளுக்கான உத்தேசமான கருப்பொருட்கள்: தமிழ் மொழி, சமூகம், பண்பாடு, இன மேம்பாடு மற்றும் அதற்கான திட்டங்கள், பன்னாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை முறை, மொழிப்பற்று, பேச்சு வழக்கு, பழந்தமிழ்க் கலைகள், அக்கலைகளில் பயிற்சி மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள், கலைச் சின்னங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, இளைய தலைமுறையினரின் மொழி இன ஈடுபாடு மற்றும் அதற்கான திட்டங்கள், இன்றைய கணினி அறிவியல் உலகில் தமிழ் மொழியின் நிலை மற்றும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் முதலானவை.
படைப்புகளின் வடிவம்: கதை, கட்டுரை, கவிதை (நிறைய கவிதைகள் வருவதனால் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள இயலாது!)உரையாடல், நேர்காணல், துணுக்கு ஆகியன. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு இவற்றை வெளிப்படுத்தும் சீர்மிகு ஓவியங்களும் மற்றும் புதிர்கள், விளையாட்டுக்கள் போன்றவையும் வரவேற்கப்படுகின்றன.
பக்க அளவு: A-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்
கடைசி நாள்: தயவு செய்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பவும்!
அனுப்ப வேண்டிய முகவரி: fetna.malar@gmail.com
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது மின்னஞ்சலிலும் கேட்கலாம்.
விரைந்து உங்களது படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள்! நன்றி!
5 comments:
இதற்கு முதல் வெளிவந்த பெட்னா மலர்கள் எங்காவது இணையத்தில் பார்வையிடக்கூடியவாறு உள்ளனவா?
தீவு,
நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்!
விடை இப்போது தெரியவில்லை:)) பெரும்பாலும் இணையத்தில் இருக்காது என்றே நினைக்கிறோம். ஒருவேளை ஏற்ற முடிந்தால் அதைச் செய்துவிட்டு சுட்டியைத் தருகிறோம். விரைவில் உங்கள் கேள்விக்கான சரியான பதிலைப் பெற்றுத் தர
முயல்கிறோம். நன்றி!
விழா மலர் சிறக்க வாழ்த்துக்கள்
- ரசிகவ் ஞானியார்
//பக்க அளவு: A-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்
//
Can we send electronically in unicode?
Thx
ரசிகவ், நன்றி!
//Can we send electronically in unicode?//
நிச்சயமாக! எந்த எழுத்துரு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் சுந்தர்.
அதனையே பெரிதும் வரவேற்கிறோம். கையெழுத்தாக அனுப்ப விரும்பினால் அதற்கும் வகை செய்யப்படும்.
Post a Comment